முதுகில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக, அமெரிக்காவில் நடைபெற்று வரும் MLC தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் நான்ட்ரே பர்கர் விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக சக தென்னாப்பிரிக்க வீரரான டியான் ஃபாரஸ்டர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
நடப்புத் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடிய பர்கர், ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியிருந்தார்.
இவரது காயம், செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கருத்தில் கொண்டு தென்னாப்பிரிக்க அணிக்குச் சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக அணியில் இணைந்துள்ள 26 வயதான டியான் ஃபாரஸ்டர், ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகளில் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கின் கீழ் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இதற்கிடையில், முதுகுவலி காரணமாக டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் ஃபாஃப் டு பிளெஸிஸ் கடந்த போட்டியில் விளையாடவில்லை.
அவருக்குப் பதிலாக டொனோவன் ஃபெரைரா அணியை வழிநடத்தினார்.

