இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் காயமடைந்திருந்த லெபனான் இராணுவ வீரர் மரணம்!

0
4

கடந்த 2024 ஆம் ஆண்டு தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்திருந்த லெபனான் இராணுவ வீரர் ஒருவர், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (21) மரணமடைந்துள்ளார்.

லெபனான் இராணுவத்தின் கோப்ரல் தரநிலை அதிகாரியான 40 வயதுடைய சமீர் அல்-அப்த் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று, டயர் துறைமுக நகருக்கு தெற்கே உள்ள கிளைலா கடற்கரை நகரில் அவர் கடமையில் இருந்த தளம் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்திருந்தார்.

சைடோன் நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சமீர் அல்-அப்த், தனது சேவைக் காலத்தில் இராணுவத்தின் பல பாராட்டுக்களைப் பெற்றவர் என இராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையிலான எல்லை கடந்த போரில் லெபனான் நாட்டின் உத்தியோகபூர்வ இராணுவம் நேரடியாகப் பங்கெடுக்கவில்லை.

இருப்பினும், கடந்த மார்ச் மாதம் முதல் இருதரப்பு மோதல்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலின் தாக்குதல்களால் லெபனான் இராணுவ வீரர்கள் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here