இஸ்ரேலியப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, தெற்கில் நிலவும் போர் நிறுத்தத்தை பலப்படுத்துவதே தமது அரசாங்கத்தின் முன்னுரிமை என்று லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் தெரிவித்துள்ளார்.
லெபனானுக்கு வருகை தந்துள்ள பிரித்தானிய தூதுக்குழுவினரைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
2027-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையினர் அங்கிருந்து வெளியேறத் தயாராகி வரும் நிலையில், லெபனான் தொடர்ந்து பிரித்தானியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இஸ்ரேலிய படைகள் வெளியேறிய பிறகு, அந்தப் பகுதிகளில் லெபனான் இராணுவத்தை நிலைநிறுத்துவதன் மூலம் போர் நிறுத்தத்தை வலுப்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், வொஷிங்டனில் நடைபெறும் லெபனான் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தைகள், அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை என்றும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
ஈரான் மற்றும் அமெரிக்காவின் தொடர்ச்சியான கோரிக்கைகளைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லா அமைப்புக்கும் இடையிலான மோதல்கள் குறைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

