இன்று ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் – ட்ரம்ப்

0
9

இன்றிரவுக்குள் ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நேட்டோ உச்சிமாநாட்டின் போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இருநாடுகளுக்கும் இடையிலான தற்காலிக போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் ஈரான் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக அவர் கூறினார்.

நான் இனி அவர்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த விரும்பவில்லை எனக் கூறினார்.

என்னைப் பொறுத்தவரை, அது முடிந்துவிட்டது. அவர்களுடன் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல், அவர்கள் பொய்யர்கள் என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அவரின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து சர்வதேச சந்தையில் சடுதியாக 5 சதவீதம் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here