அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இடைக்கால ஒப்பந்தம் குறித்து சீனா தனது நம்பிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் ஒரு “நேர்மறையான சமிக்ஞையை” வெளிப்படுத்துவதாகவும், இதனை இரு தரப்பும் இணைந்து பாதுகாத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனா எப்போதும் நீதியான நிலைப்பாட்டையே கடைப்பிடிப்பதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கான ஈரானின் முயற்சிகளுக்கு சீனா முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், வளைகுடா நாடுகள் மற்றும் ஏனைய பிராந்திய நாடுகளுடன் ஈரான் தனது உறவை மேம்படுத்திக் கொள்வதற்கும் சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தம், பிராந்திய அமைதிக்கு வழிவகுக்கும் என்பதில் சீனா நம்பிக்கை கொண்டுள்ளது.

