புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ தி ஒடிசி’ திரைப்படம், இந்திய பாக்ஸ் ஆபீஸில் முதல் நாளிலேயே வரலாறு காணாத வசூல் சாதனை படைத்தது.
மேட் டாமன் மற்றும் டாம் ஹாலண்ட் இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம், இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘தி ஒடிசி’ திரைப்படம், இந்தியாவில் முதல் நாளில் மட்டும் ரூ.20.76 கோடி மொத்த வசூலையும், ரூ.17.40 கோடி நிகர வசூலையும் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் இருக்கும் அசுரத்தனமான வரவேற்பை இந்த வசூல் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது.
இந்திய அளவில் இந்தத் திரைப்படம் சராசரியாக 48.7% திரையரங்கு ஆக்குபென்சியுடன் இயங்கியது. குறிப்பாக, கிறிஸ்டோபர் நோலனின் முந்தைய படங்களைப் போலவே, இதற்கும் ஐமேக்ஸ் மற்றும் முப்பரிமாண திரையரங்குகளில் டிக்கெட்டுகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் விற்றன.

