IDMNC சர்வதேச உயர்கல்வி நிறுவனத்தின் தலைவரான கலாநிதி வி. ஜனகன், தனது 45ஆவது பிறந்தநாளை கடந்த ஜூன் 27 சனிக்கிழமை அன்று கொழும்பில் உள்ள ‘அமாரி’ (Amari Hotel) ஹோட்டலில் விமரிசையாகக் கொண்டாடினார். இந்நிகழ்வில் அச்சக, மின்னணு மற்றும் சமூக ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த பிரதம ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பிறந்தநாள் கேக் வெட்டும் நிகழ்வு இடம்பெற்றதுடன், அங்கிருந்த ஊடகத்துறையினர் கலாநிதி ஜனகனுக்கு தங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

எல்லைகளைக் கடந்து சமூகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் தனது அர்ப்பணிப்பு, மேன்மை மற்றும் பங்களிப்புகள் மூலம் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் ஒரு தொலைநோக்குச் சிந்தனை கொண்ட தலைவரைக் கௌரவிக்கும் ஒரு வாய்ப்பாகவும் இந்நிகழ்வு அமைந்தது.

இந்நிகழ்வில் உரையாற்றிய கலாநிதி ஜனகன், தனது வாழ்க்கைப்பயணம் குறித்துப் பகிர்ந்துகொண்டதுடன், IDMNC சர்வதேச உயர்கல்வி நிறுவனம் ஊடாக கல்வித் துறைக்கு அவர் ஆற்றிவரும் தொடர்ச்சியான பங்களிப்புகளையும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இந்நிறுவனத்தின் தற்போதைய கல்விசார் திட்டங்கள் மற்றும் எதிர்காலத் தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.

கலாநிதி ஜனகன் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இடையிலான சுமுகமான கலந்துரையாடல்கள் மற்றும் பரஸ்பரப் பாராட்டுக்களுடன் இந்நிகழ்வு மிகச் சிறப்பாகக் கடந்து சென்றது.

மேலும், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஊடகப் பிரதிநிதிகளுக்கு நன்றியறிதலின் அடையாளமாக கலாநிதி ஜனகன் பரிசில்களையும் வழங்கிக் கௌரவித்தார்.

இந்நிகழ்வில் IDMNC சர்வதேச உயர்கல்வி நிறுவனத்தின் வணிக மற்றும் செயல்பாட்டுத் துறைத் தலைவர் (Head of Business and Operations) ரிஸ்கான் முகமது உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


