அனிருத் குரலில் ‘Hi’ படத்தின் ‘ரசகுல்லா’ பாடலின் ப்ரோமோ வெளியானது!

0
7
Sivakarthikeyan, Anirudh Ravichander, Jayam Raja and Others At The Velaikkaran Audio Launch

இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா மற்றும் வளர்ந்து வரும் இளம் நடிகர் கவின் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் திரைப்படம் ‘Hi’.

ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே வெளியான இந்த படத்தின் முதல் பாடல் ஜிவி பிரகாஷ் குரலில் வெளியான ‘ கண்ணக்குழியா’ மெலடி பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலின் அப்டேட் வெளியாகியுள்ளது.

Hi’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ரசகுல்லா’ பாடலின் ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இப்பாடலை பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் ரவிச்சந்தர் தனது துள்ளலான குரலில் பாடியுள்ளார்.

ப்ரோமோ வீடியோவின் இறுதியில், இப்பாடல் நாளை வெளியாகும் என்று அப்படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here