வெப்ப அலை உச்சம் – பிரான்ஸில் மதுபான விற்பனைக்கு கட்டுப்பாடு

0
3

பிரான்ஸில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக மதுபான விற்பனையை மட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடும் வெப்பத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் மேலதிக பாதிப்புகள் காரணமாக மருத்துவமனைகள் மீது விழும் சுமையைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக ஸ்பெயின், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நிலவி வரும் கடும் வெப்பம், தற்போது ஜெர்மனி மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுக்கும் பரவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here