ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையின் ஹமாஸ் அமைப்பின் தலைவர் ஜாஹர் ஜபாரின் தலைமையிலான தூதுக்குழு எகிப்து தலைநகர் கெய்ரோவை வந்தடைந்துள்ளது.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக எகிப்திய அதிகாரிகள் மற்றும் மத்தியஸ்தர்களை இந்தக்குழு சந்திக்கவுள்ளதாக ஹமாஸ் சிரேஷ்ட அதிகாரி தாஹர் அல்-நுனு (Taher al-Nunu) தெரிவித்துள்ளார்.
காசாவில் இஸ்ரேலின் தினசரி கொலைகள் மற்றும் படுகொலைகளை நிறுத்துவதும், மருத்துவமனைகள், பேக்கரிகள் மற்றும் உள்கட்டமைப்பு மறுசீரமைப்புக்கான பொருட்கள் உள்ளிட்ட காசாவின் அத்தியாவசியத் தேவைகளை அனுமதிக்க இஸ்ரேலை வற்புறுத்துவதுமே இவர்களின் முக்கிய நோக்கமாகும்.
அத்துடன், ஷார்ம் எல்-ஷேக் ஒப்பந்தத்தின் எஞ்சிய நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.
