ஆப்கானிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷாபூர் சத்ரான் காலமானார்!

0
7

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷாபூர் சத்ரான் (Shapoor Zadran), ‘அப்லாஸ்டிக் அனீமியா’ (Aplastic Anemia) என்ற அரிய வகை இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு, தனது 38ஆவது வயதில் காலமானார்.

இத்தகவலை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு இந்த நோயால் பாதிக்கப்பட்ட அவர், இந்தியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்து முன்னேறுவதற்கு அடித்தளமாக இருந்த முக்கிய வீரர்களில் ஷாபூர் சத்ரானும் ஒருவர்.

2009 முதல் 2020 வரை ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார்.

இவர் 44 போட்டிகளில் பங்கேற்று 43 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அத்துடன் 36 டி20 போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஷாபூர் சத்ரானின் மறைவுக்கு கிரிக்கெட் சபை, சக வீரர்கள், ரசிகர்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் சமூகம் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here