அமீர் கானால் கூட இந்த நடிப்பை தந்திருக்க முடியாது!- விஜய் சேதுபதியை உச்சிமுகர்ந்த மிஷ்கின்!

0
8

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ட்ரெய்ன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின், நடிகர் விஜய் சேதுபதியின் அர்ப்பணிப்பு மற்றும் நடிப்புத் திறனை வியந்து பாராட்டியதுடன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கானுடன் ஒப்பிட்டுப் பேசியது தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

மேடையில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய இயக்குநர் மிஷ்கின், “விஜய் சேதுபதியைத் தவிர வேறு யாராலும் இந்த கதாபாத்திரத்தை இவ்வளவு கச்சிதமாகச் செய்திருக்க முடியாது. ‘ஏன், கமல் சார் இதைவிடச் சிறப்பாகச் செய்திருக்க மாட்டாரா?’ என்று நீங்கள் கேட்கலாம்.

இல்லை, என்னைப் பொறுத்தவரை ஒரு பெரிய ஸ்டாரான அமீர் கானால் கூட இந்த கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி கொடுத்த நியாயத்தைக் கொடுத்திருக்க முடியாது. விஜய் சேதுபதி ஒரு பிரம்மாண்டமான எரிமலை போன்றவர்,” என்று புகழாரம் சூட்டினார்.

மேலும், “விஜய் சேதுபதி இந்தப் படத்தில் தனது சுயநலமற்ற நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். லாரன்ஸ் ஒலிவியர் அல்லது சோய் மின்-சிக் போன்ற உலகத் தரம் வாய்ந்த நடிகர்களுடன் என்னால் பணியாற்ற முடியாமல் போயிருக்கலாம், ஆனால் விஜய் சேதுபதியுடன் பணியாற்றியதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here