கால்பந்து உலகக் கிண்ண தொடரின் குழு J பிரிவிற்கான போட்டியில், ஆஸ்திரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் நடப்பு செம்பியனான அர்ஜென்டினா அடுத்த சுற்றுக்கான தனது தகுதியை உறுதி செய்துள்ளது.
போட்டியின் 8 ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த பெனால்டி (Penalty) வாய்ப்பை லியோனல் மெஸ்ஸி தவறவிட்டார்.
எனினும், ஆட்டத்தின் 38 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி முதல் கோலை அடித்து அசத்தினார்.
இந்த கோலின் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற மிரோஸ்லாவ் குளோசேயின் சாதனையை (16 கோல்கள்) மெஸ்ஸி முறியடித்தார்.
அதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக நகர்ந்த ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+5′ நிமிடம்), ஜூலியன் ஆல்வாரெஸ் கொடுத்த பந்தை மிகச்சிறப்பாக கோலாக மாற்றி மெஸ்ஸி அர்ஜென்டினாவின் வெற்றியை 2-0 என உறுதி செய்தார்.

