“நாட்டில் நடப்பது அவசரநிலை”-மாணவர்கள் போராட்டத்திற்கு கொச்சியில் திரண்டு ஆதரவு அளித்த மலையாளத் திரையுலகினர்!

0
6

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜாந்தர் மந்தரில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக, மலையாளத் திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கொச்சியில் திரண்டு தங்களது பலத்த ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

கொச்சி மகாராஜாஸ் கல்லூரியில் மாணவர்கள் யூனியன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆதரவுப் போராட்டத்தில், பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ், இயக்குநர் ஆஷிக் அபு, மஹேஷ் நாராயணன் மற்றும் எழுத்தாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

போராட்டக் களத்தில் பேசிய நடிகர் ஜோஜு ஜார்ஜ், நாட்டில் நிலவும் தற்போதைய சூழலை ‘அவசரநிலை’ என கடுமையாக விமர்சித்தார். “ஒரு நாட்டின் கல்வி அமைப்பில் வினாத்தாள் கசிவது அல்லது சீர்கேடு ஏற்படுவது என்பது அந்த நாட்டிற்கு அளிக்கப்படும் ‘மெதுவான விஷத்திற்கு சமம்.”

நியாயத்திற்காகக் குரல் கொடுக்கும் மாணவர்களைத் தடிகளால் அடித்து நொறுக்குவதும், எதிர்க் கட்சித் தலைவர்களைச் சட்டையை பிடித்து இழுத்துச் செல்வதும் ஒரு கொடூரமான ஜனநாயக விரோத நடவடிக்கை. நாட்டில் இப்போது நடப்பது அப்பட்டமான அவசரநிலைதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here