அமெரிக்கா – ஈரான் போர் உச்சக்கட்டத்தில்

0
6

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை இலக்கு வைத்து ஈரான் நடத்திய தாக்குதலில், சீன நிறுவனம் ஒன்றின் கட்டடம் சேதமடைந்து ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, ஜோர்தானில் உள்ள அமெரிக்கத் தளத்தின் மீதும் ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இதற்குப் பதிலடியாக, ஈரானின் கெஷ்ம் தீவில் உள்ள கட்டடம் ஒன்றின் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய குண்டுவீச்சில் கணவன், மனைவி மற்றும் அவர்களின் 2 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஈரானின் பல்வேறு ராணுவக் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்களை இலக்கு வைத்து அமெரிக்கா தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

சுமார் 13 நாட்களாகத் தொடரும் இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here