ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகர் அல்லு அர்ஜுன், ரசிகர்கள் தங்களது நேரத்தை சமூக வலைதளங்களில் சண்டையிடுவதற்காக வீணடிக்காமல், சுய முன்னேற்றம், குடும்ப நலன் மற்றும் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்காக புதிய காப்பீட்டுத் திட்டத்தை அவர் அறிவித்தார்.
அதன்படி, மாநில நிர்வாகிகளுக்கு ரூ.5 லட்சமும், மாவட்ட நிர்வாகிகளுக்கு ரூ.3 லட்சமும் மதிப்பிலான விபத்து காப்பீடு வழங்கப்படும்.
இதன் மூலம் 900-க்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள்.
சினிமாவுக்கு அப்பால் ரசிகர்களின் எதிர்காலம் மற்றும் நலனில் அக்கறை காட்டிய அல்லு அர்ஜுனின் இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திரைப்படப் பணிகள்: இதற்கிடையில், அல்லு அர்ஜுன் தற்போது இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ‘ராக்கா’ படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
