அரச நடைமுறைகளால் தொழில் முடங்குவதைத் தடுக்க புதிய திட்டம்

0
6

தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சந்திக்கும் நிர்வாகச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜனாதிபதியின் கருத்தாக்கத்திற்கு அமைவாக ‘தேசிய வணிக வசதி மையம்’ நிறுவப்பட்டுள்ளது.

புதிய தொழில்களைத் தொடங்கும் போதும், அவற்றை நடத்தும் போதும் அரச இயந்திரத்தின் மூலம் ஏற்படும் தாமதங்கள் மற்றும் தடைகளை நீக்குவதே இம்மையத்தின் முதன்மை நோக்கமாகும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

நிலம், நீர், மின்சாரம் மற்றும் வீதி உள்கட்டமைப்பு வசதிகளைப் பெறுவதிலும், பல்வேறு அரச நிறுவனங்களிடம் இருந்து உரிமங்கள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதிலும் ஏற்படும் காலதாமதம் காரணமாக பல தொழிலதிபர்கள் தங்களது திட்டங்களை கைவிடும் நிலை காணப்பட்டது.

இதற்கு தீர்வாக, இத்திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளது.

தற்போது தொழிலதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உரிய அதிகாரிகளிடம் கொண்டு சென்று உடனடியாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தல்.

புதிய முதலீட்டாளர்களுக்கு தேவையான வணிகத் திட்டங்கள், நிலம், உள்கட்டமைப்பு மற்றும் அனைத்து உரிமங்களையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் வசதியை ஏற்படுத்துதல்.

அரசாங்க நடைமுறைகளால் பாதிப்புகளைச் சந்திக்கும் தொழிலதிபர்கள், தங்களின் பிரச்சினைகளை இந்த மையத்திற்கு அனுப்பி விரைவான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here