ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எயார்பஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியல்

0
4

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்திற்கு ஏர்பஸ் (Airbus) விமானங்களைக் கொள்முதல் செய்ததில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முறைகேடு இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்னதாக, குறித்த எயார்பஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாட்டியங்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு (CIABOC) அழைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது சந்தேகநபராக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன், அவரது பிணை மனு தொடர்பான உத்தரவு அன்றைய தினம் (23ஆம் திகதி) அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here