ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுகப் போட்டியிலேயே 150 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்துள்ளார் தென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் ஜோர்டான் ஹெர்மேன்.
விண்ட்ஹோக்கில் நமீபியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 348 ஓட்டங்களை குவித்தது.
தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய ஜோர்டான் ஹெர்மேன், 126 பந்துகளில் 17 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 150 ஓட்டங்களை விளாசினார்.
இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அறிமுக ஆட்டத்திலேயே அதிகபட்ச ஓட்டங்களை எடுத்த மேத்யூ பிரீட்ஸ்கேவின் உலக சாதனையை சமன் செய்தார்.
டோனி டி ஜோர்சியுடன் இணைந்த ஹெர்மேன், 2வது விக்கெட்டுக்கு 190 ஓட்டங்கள் சேர்த்து அணியை பலமான நிலைக்கு கொண்டு சென்றார்.
இறுதியில் டெவால்ட் பிரேவிஸ் மற்றும் கார்பின் போஷ் அதிரடி காட்ட, தென்னாப்பிரிக்கா 348 ஓட்டங்களை எட்டியது.
நமீபியா தரப்பில் ருபென் டிரம்பெல்மேன் 68 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

