தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காந்தூர் (Ghandour) மருத்துவமனை முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
நபதியா அல்-ஃபவ்கா பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் தீவிரத்தால், கட்டிடத்தின் எந்தப் பகுதியும் எஞ்சியிருக்கவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நல்வாய்ப்பாக, தாக்குதல் நடந்த நேரத்தில் மருத்துவமனைக்குள் நோயாளிகளோ அல்லது மருத்துவப் பணியாளர்களோ யாரும் இருக்கவில்லை என்பதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தெற்கு லெபனானில் ஹெஸ்பொல்லா அமைப்பு நடத்திய ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்போம் என இஸ்ரேலிய ராணுவம் எச்சரித்திருந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

