போர் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் ஈரான் எடுத்த அதிரடி நடவடிக்கை!

0
6

தொடர்ந்து நீடித்து வரும் போர் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், ஈரான் அரசு ‘பொருளாதாரப் போர் பணிக்குழுவை’ (Economic War Task Force) அமைத்துள்ளதாகத் தஸ்னீம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வர்த்தகம், நிதியுதவி மற்றும் வணிகத் துறைகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை உடனடியாகக் கண்டறிந்து தீர்ப்பதே இதன் முதன்மை நோக்கம் என ஈரானின் பிரதிப் பொருளாதார அமைச்சர் முர்தஸா ஜமானியான் தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாகத் தொடரும் தடைகள் மற்றும் தற்போதைய போர் காரணமாக ஈரானின் பொருளாதாரம் ஏற்கனவே கடும் அழுத்தத்தில் உள்ளது.

ஈரானைத் தனிமைப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா இந்த வார தொடக்கத்தில் கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், ஈரான் இந்த அதிரடி பணிக்குழுவை உருவாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here