மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானிய எண்ணெய் விநியோக நெட்வொர்க்குடன் தொடர்புடைய மூன்று பெரிய எண்ணெய் தாங்கி கப்பல்கள் மீது அமெரிக்கா தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது.
கார்க் தீவு அருகே M/T டவுனி கப்பலையும், ஈரானின் தெற்கு நகரமான ஜாஸ்க் (Jask) அருகே M/T ஸ்டார்க் 1 கப்பலையும் நடத்திய தாக்குதல்கள் மூலம் “நிரந்தரமாக இயங்க முடியாதவாறு முடக்கியுள்ளதாக” CENTCOM தெரிவித்துள்ளது.
அதேபோல, ஓமான் வளைகுடாவில் M/T கைலோ கப்பல் மீது பல முக்கியமான இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதில், அக்கப்பல் “முழுமையாக அழிக்கப்பட்டதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு முன்னர் கப்பலின் ஊழியர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மூன்று எண்ணெய் தாங்கி கப்பல்களும், ஈரான் புரட்சிகர காவல் படை மற்றும் அதன் பிராந்திய அமைப்புகளுக்குப் பில்லியன் கணக்கான டாலர்களைத் திரட்டித் தரும் “நிழல் நெட்வொர்க்கின்” ஒரு பகுதி என அமெரிக்க மத்திய கட்டளை குற்றம் சாட்டியுள்ளது.

