மாணவர்களின் நலன் கருதி கல்வி அமைச்சு அதிரடி நடவடிக்கை

0
8

பாடசாலையின் பெயர் அல்லது இலட்சினையை பயன்படுத்தி நடத்தப்படும் எந்தவொரு நிகழ்விலும் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் அரசாங்கம் முழுமையான தடை விதித்துள்ளது.

கல்வி அமைச்சின் 2026/10 இலக்கச் சுற்றறிக்கையின்படி, பாடசாலையின் பெயர் அல்லது இலட்சினையை பயன்படுத்தப்படும் எந்தவொரு நிகழ்வும் பாடசாலை நிகழ்வாகவே கருதப்படும்.

இந்த விதியை மீறும் நிகழ்வுகளை உடனடியாகத் தடை செய்யக் கல்வி அமைச்சின் செயலாளருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னணி பாடசாலைகளுக்கு இடையிலான Big Match கிரிக்கெட் போட்டிகளின் போது மாணவர்கள் மது மற்றும் போதைப்பொருட்களுக்கு ஆளாகுவதாகப் பெற்றோர்களிடம் இருந்து தொடர்ந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை கிரிக்கெட் போட்டிகள் உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் இந்த விதிமுறைகள் மிகக் கடுமையாக கண்காணிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here