இந்தியாவுக்கு எதிரான கொழும்பு டெஸ்ட் போட்டியில் கலக்கிய இலங்கை அணியின் வளர்ந்து வரும் இளம் வீரர்கள், ஐசிசி-யின் புதிய டெஸ்ட் தரவரிசையில் பிரம்மாண்டமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளனர்.
2வது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய 25 வயதான சொனால் தினுஷ, 25வது இடத்தைப் பிடித்து தன் வாழ்நாளின் சிறந்த தரவரிசையைப் பதிவு செய்துள்ளார்.
அத்துடன் தனது 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடி 80 மற்றும் 92 ரன்கள் குவித்த பசிந்து சூரியபண்டார, ஒரே அடியாக 170 இடங்கள் முன்னேறி 74வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த கமிந்து மெண்டிஸ் மீண்டும் ஐசிசி தரவரிசையின் டாப் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.
முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த தேவ்தத் படிக்கல் 54வது இடத்திற்கும், ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் எடுத்த துருவ் ஜூரெல் 65வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

