சுற்றுலாப் பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி!

0
7

நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக குமண மற்றும் கல் ஓயா தேசிய பூங்காக்களிலுள்ள சுற்றுலா விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கல் ஓயா தேசிய பூங்காவின் ஹத்பொத நுழைவாயிலைச் சார்ந்த அனைத்து சுற்றுலா விடுதிகளும் மூடப்பட்டுள்ளதுடன், மறு அறிவித்தல் வரை புதிய முன்பதிவுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு வறட்சி தணிந்த பின்னர் மாற்றுத் திகதிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சி காரணமாக யால தேசிய பூங்காவின் மண்டலம் 1 மற்றும் 2 இல் உள்ள சுற்றுலா பங்களாக்கள் மற்றும் முகாம்கள் அக்டோபர் மாதத்திற்காக திறக்கப்பட மாட்டாது என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here