காசாவில் மீண்டும் தொடரும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள்

0
10

காசா நகரின் மஷஹ்ரா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் இன்று மட்டும் காசா பகுதியில் இஸ்ரேலியத் தாக்குதல்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளதாக ‘வாஃபா’செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த அண்மைக்காலத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

முன்னதாகச் சுட்டிக்காட்டப்பட்டதனைப் போன்று, காசா நகரின் சப்ரா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவரும், கான் யூனிஸ் நகருக்கு அருகில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மூவரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here