கல்முனை வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்களின் சீருடை பிரச்சினைக்கு உடனடி மற்றும் நிரந்தரத் தீர்வு காண சுகாதார அமைச்சர் நடவடிக்கை

0
2

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைகளில் நிலவும் முஸ்லிம் கனிஷ்ட ஊழியர்கள் மற்றும் தாதி உத்தியோகத்தர்களின் சீருடைகள் தொடர்பான பிரச்சினைக்கு, குறுகிய கால மற்றும் நீண்ட கால நிரந்தர தீர்வினை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) சுகாதார அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த சந்திப்பில் ஆளுங்கட்சியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here