மகளிர் T20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை மகளிர் அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
அனுபவமிக்க சகலதுறை ஆட்டக்காரர் சமரி அத்தபத்து தலைமையில் இலங்கை அணி களமிறங்கவுள்ளதுடன், ஹர்ஷிதா மாதவி துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி சமரி அத்தபத்து, ஹர்ஷிதா மாதவி, இமேஷா துலானி,சஞ்சனா காவிந்தி, விஷ்மி குணரத்ன, கவீஷா தில்ஹாரி, நிலக்ஷிகா சில்வா, ஹாசினி பெரேரா, கௌஷினி நுத்யங்கனா, தேவமி விஹங்கா, சுகந்திகா தாசநாயக்க, சாமுடி பிரபோதா, சேதனா விமுக்தி, காவ்யா காவிந்தி மற்றும் மிதாலி அயோத்யா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

