
வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய 7 மாவட்டங்களுக்கு நாளை (13) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, பகல் வேளையில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையின் அளவு சில இடங்களில் ‘கவனமாக இருக்க வேண்டிய எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளுமாறும், முடிந்தவரை நேரடியாக வெயிலில் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், நாளின் அதிக வெப்பமான நேரங்களில் கடினமான வெளிப்புறப் பணிகளில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது
