நாட்டின் பல பகுதிகளில் நாளை கனமழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

0
3

நாட்டின் பல பகுதிகளில் நாளை கனமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை பெய்யக்கூடிய பகுதிகள்:

கனமழை (75 மி.மீ க்கும் மேல்): சபரகமுவ மாகாணம், காலி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்கள்.
அவ்வப்போது மழை/இடியுடன் கூடிய மழை:சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள்.
லேசான மழை:வடமேல் மாகாணம்.
பலத்த காற்று வீசக்கூடும்:
வடமத்திய, சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

பொதுமக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்:
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here