மத்திய கிழக்கு பதற்றம்: குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

0
3

மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குவைத் – கொழும்பு இடையிலான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச்சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதை இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை (CAASL) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையே பயணிக்கவிருந்த பயணிகள் எதிர்கொண்ட அசௌகரியங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here