நடிகர் ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு: டிசம்பரில் வெளியாகிறது!

0
5

லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், பிரபல தமிழ் நடிகர் ஜீவா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான ‘தகப்பன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘கிடா’ திரைப்படத்தின் மூலம் உணர்வுப்பூர்வமான கதையைத் தந்து ரசிகர்களின் மனதை வென்ற இயக்குநர் ரா. வெங்கட் இத்திரைப்படத்தை எழுதி இயக்கி வருகிறார்.

இத்திரைப்படம் மதுரையைச் சுற்றியுள்ள கிராமத்துப் பகுதிகளை மையமாகக் கொண்டு, தந்தை மற்றும் மகனுக்கு இடையேயான ஆழமான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உணர்வுப்பூர்வமான டிராமா பாணியில் உருவாக்கப்பட்டு வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் ஜீவா மற்றும் ஒரு சிறுவன் படிக்கட்டில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஜீவாவின் முந்தைய நகைச்சுவைத் திரைப்படமான ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தின் போஸ்டரில் ‘கருப்பசாமி’ திருவிழா பின்னணி காட்டப்பட்டிருப்பது கதைக்களத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here