ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ திரைப்படம் வெளியான நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ.8,846 கோடி வசூலித்துள்ளது.
இதன்மூலம் சினிமா வரலாற்றிலேயே வெளியான முதல் வாரத்திலேயே அதிக வசூல்பெற்ற இரண்டாவது படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக 2-வது மிகப்பெரிய உலகளாவிய ஓப்பனிங் பெற்ற திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்தியாவில் ஜூலை.30ம் தேதி வெளியானநிலையில், நேற்றுவரை மட்டும் ரூ.306.37 கோடி வசூல் செய்துள்ளது. இங்கு ஆங்கில பதிப்பு முதலிடத்தில் இருந்தாலும், இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் வேறு படங்கள் எதுவும் பெரிதாக வெளியாக நிலையில், விடுமுறை நாட்களில் (சனி, ஞாயிறு) நல்ல வசூலை குவித்துள்ளது.
