அஜின்கியா ரஹானே அதிகாரப்பூர்வ ஓய்வு!

0
9

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர ஆட்டக்காரரான அஜின்கியா ரஹானே, சர்வதேச கிரிக்கெட் உட்பட அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 85 டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே, 8,000-க்கும் அதிகமான ரன்களைக் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளார்.

குறிப்பாக, 2020-21 பார்டர்-கவாஸ்கர் தொடரில் முக்கிய வீரர்கள் காயமடைந்த நிலையிலும், இந்திய அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி அவுஸ்திரேலியா*மண்ணில் 2-1 என வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியைக் கைப்பற்றிக் கொடுத்துத் தன் தலைசிறந்த கேப்டன்ஷிப்பை நிரூபித்தார்.

2023-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில்தான் அவர் கடைசியாக இந்திய சீருடையில் களமிறங்கினார்.

தனது ஓய்வு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட ரஹானே, வாழ்க்கையில் தொடக்கமும் முடிவும் இயல்பானது.

சரியான நேரத்தில் விலகுவது அவசியம்.

களத்தில் எனது பேட்டிங்கிற்கு டைமிங் எந்தளவுக்கு முக்கியமோ, அதேபோல விளையாட்டிலிருந்து விலகவும் இதுவே சரியான நேரம் என உணர்கிறேன்.

Cap 278 விடைபெறுகிறது, எனக் குறிப்பிட்ட உணர்ச்சிப்பூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here