ஈரான் வான் எல்லையில் நுழைந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

0
4

ஈரானின் தென்மேற்கு துறைமுக நகரமான பண்டார் இமாம் கொமேனியில் அத்துமீறி நுழைந்த எதிரியின் ட்ரோனை இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) சுட்டு வீழ்த்தியுள்ளது.

நகரத்தின் வான்பரப்பில் வட்டமிட்ட அந்த ட்ரோன் அடையாளம் காணப்பட்டு, IRGC-யின் உள்ளூர் பிரிவால் இடைமறிக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக தஸ்னிம் (Tasnim) செய்தி முகமை தெரிவித்துள்ளது.

வீழ்த்தப்பட்ட ட்ரோனின் பாகங்கள் அண்மையிலுள்ள குடியிருப்பு ஒன்றின் மீது விழுந்தபோதிலும், அதில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தாக்குதலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த IRGC-யின் வெடிபொருள் அகற்றும் குழு, ட்ரோனின் எஞ்சிய பாகங்களைக் கைப்பற்றி, ஆபத்தான பொருட்களை செயலிழக்கச் செய்து அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here