ஈரான் – ஜப்பான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

0
4

ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலை நீக்குவது குறித்து ஈரானும் ஜப்பானும் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி ஆகிய இருவரும் இணைந்து இந்த ஆலோசனையை மேற்கொண்டனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்தும், ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது தொடர்பாகவும் அவர்கள் விவாதித்தனர்.

பிராந்திய அமைதியை நிலைநாட்டுவதற்கான தூதரக முயற்சிகள் குறித்து ஜப்பான் அமைச்சருக்கு தாம் விளக்கமளித்ததாக அப்பாஸ் அராக்சி தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பாதுகாப்பின்மையைப் போக்குவதற்குத் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பும் கூட்டு ஒத்துழைப்பும் அவசியமானது என்று இரு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பிடத்தக்கது என்னவென்றால், ஜப்பான் தனது கச்சா எண்ணெய் இறக்குமதியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிக்கு இந்த ஹோர்முஸ் நீரிணையையே சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here