முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களில் இருந்து பணம் பெறும் எந்தவொரு நிறுவனமும் அல்லது நாடும் ஹோர்மூஸ் நீரிணை வழியாக செல்ல அனுமதிக்கப்படாது என ஈரான் எச்சரித்துள்ளது.
கப்பல்கள் மற்றும் சரக்குகளுக்கு ஏற்படும் சேதங்களுக்கு ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்கள் மூலம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் முன்னர் விடுத்திருந்த கோரிக்கையை ஈரான் ‘தீவிரமானது’ என நிராகரித்துள்ளது.
ஈரான் ஆயுதப் படைகளின் காதம் அல்-அன்பியா தலைமைச் செயலகத்தின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டொனால்ட் ட்ரம்பின் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டு ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களைப் பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களும் நாடுகளும் நீரிணையைப் பயன்படுத்துவதிலிருந்து தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப்பின் இந்த அச்சுறுத்தல் ஒரு ‘சட்டவிரோத நடவடிக்கை’ என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

