ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வழியில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், நாட்டில் கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்பட வேண்டிய பங்களிப்புகள் மற்றும் முழுமையான ஒத்துழைப்புகள் குறித்தும் ஜனாதிபதி தனது கவனத்தை நேரடி ஆலோசனைகள் மூலம் செலுத்தினார்.
இச்சந்திப்பில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்ரகீர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன தலைமையில், அதன் உறுப்பினர்களான ரொஷான் மஹாநாம, அவந்தி கொழம்பகே, உபுல் குமரப்பெரும, துஷிர ரதெல்ல, சிதத் வெத்தமுனி மற்றும் டினால் பிலிப் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

