ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத் தீ: வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்!

0
7

“ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது

இதுவரை சுமார் 2,70,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிரான்ஸின் போர்டோ (Bordeaux) பகுதியில் மட்டும் சுமார் 1,97,000 மக்களும், ஸ்பெயின் தலைநகர் மத்ரித் (Madrid) அருகே உள்ள கிராமங்களில் இருந்து 70,000 மக்களும் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காற்றின் திசையை கணிக்க முடியாததால், மீட்புப் பணிகளில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez), ‘அடுத்து வரும் சில மணிநேரங்கள் மிகவும் சவாலானவை மற்றும் சிக்கலானவை’ என எச்சரித்துள்ளார்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here