கட்டா குஸ்தி 2′ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

0
6

செல்ல அய்யாவு எழுத்து மற்றும் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை.3ம் தேதி வெளியானப் படம் ‘கட்டா குஸ்தி 2’. 2022-ல் வெளியாகி வெற்றிபெற்ற ‘கட்டா குஸ்தி’ படத்தின் தொடர்ச்சியாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பாகத்திலும், முதல் பாகத்தில் நடித்த கருணாஸ், காளி வெங்கட், முனிஷ்காந்த், மற்றும் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

வெளியானதிலிருந்து தற்போதுவரை திரையரங்குகளில் படம் நன்றாக ஓடிவருகிறது. இந்நிலையில் படம் உலகளவில் ரூ.55 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் நடிகர் விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்திலேயே ரூ.50 கோடி வசூலைக் கடந்த முதல் திரைப்படம் இதுவாகும். மேலும் 2026 ஆம் ஆண்டில் ரூ.50 கோடி வசூலைக் கடந்த 8-வது தமிழ் படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here