அமெரிக்கா – ஈரான் மீண்டும் இராணுவத் தாக்குதல்களை அறிவித்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக எரிசக்தி விநியோகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதுடன், எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று(13.07.2026) எண்ணெய் விலைகள் 4% க்கும் மேல் உயர்வடைந்துள்ளது.
பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் 0325 GMT நிலவரப்படி, 3.10 டொலர் (4.08%) உயர்ந்து, 79.11 ஆக டொலராக காணப்பட்ட நிலையில், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 2.95 டொலர் (4.11%) உயர்ந்து 74.36 டொலராக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கப் படைகள் நேற்று(12) ஈரானுக்கு எதிரான மற்றொரு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் இன்று(13) அறிவித்துள்ளனர்.

