சிம்பாப்வே தொடருக்கான இந்திய டி20 அணி அறிவிப்பு: சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை!

0
6

ஜூலை மாத இறுதியில் சிம்பாப்வேக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 15 பேர் கொண்ட குழாமில், சஞ்சு சம்சன் நீக்கப்பட்டுள்ளார்.

செப்டம்பர் மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான முதன்மை இந்திய அணியில் சஞ்சு சம்சன் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த சிம்பாப்வே தொடரில் அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதா அல்லது அணியில் இருந்து நீக்கப்பட்டாரா என்பது குறித்து பிசிசிஐ தெளிவான விளக்கம் எதையும் அளிக்கவில்லை.

தற்போது இங்கிலாந்தில் விளையாடி வரும் டி20 அணியில் இருந்து சஞ்சு சம்சன் உட்பட 7 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அக்சர் படேல், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங்,
வோஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரும் இந்த சிம்பாப்வே தொடருக்கான அணியில் சேர்க்கப்படவில்லை.

இந்தநிலையில் ரிங்கு சிங் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் ஆகியோர் மீண்டும் இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ளனர்.

பிரப்சிம்ரன் சிங், வேகப்பந்து வீச்சாளர்கள் யாஷ் தாக்கூர், அசோக் சர்மா மற்றும் ஹர்ஷ் துபே ஆகியோர் தங்களது முதலாவது சர்வதேச டி20 அழைப்பைப் பெற்றுள்ளனர்.

அண்மையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமான ஹர்ஷ் துபே, தற்போது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவ இந்திய அணிகளிலும் இடம்பிடித்து அசத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here