காசாவிற்கு வெளியே விசேட மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, பாலஸ்தீன செம்பிறை சங்கத்தின் (PRCS) குழுக்கள் குறைந்தது 30 நோயாளிகளை ரஃபா எல்லைக் கடப்புக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளதாக பாலஸ்தீன செய்தி நிறுவனமான ‘வாஃபா’ (Wafa) தெரிவித்துள்ளது.
இன்று கான் யூனிஸில் உள்ள அல்-மவாசி கள மருத்துவமனையிலிருந்து இந்த மருத்துவ வெளியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த மனிதாபிமான முயற்சிக்கு முழுமையான ஆதரவையும் உதவிகளையும் வழங்கியுள்ளதாக வாஃபா செய்தி மேலும் குறிப்பிட்டுள்ளது.

