வானிலை எச்சரிக்கை: பல மாவட்டங்களில் 50 மி.மீ க்கும் அதிக பலத்த மழை!

0
3

நாட்டின் பல பாகங்களில் அடுத்த 36 மணித்தியாலங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் இவ்வாறு 50 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here