2026-27 ஆம் ஆண்டில், எல் நினோ (El Niño) வானிலை காரணமாக இந்தியாவின் சர்க்கரை மற்றும் மக்காச்சோளம் உற்பத்தி குறையக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனால், E20 எரிபொருள் கலவை இலக்கை அடைய அரசு அரிசி அடிப்படையிலான எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
தற்போது இந்தியாவில் விற்கப்படும் E20 பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்டுள்ளது. அதில் பாதி அளவு சர்க்கரை மற்றும் மொலாஸஸ் மூலம் தயாரிக்கப்படுகிறது.
ஆனால், எல் நினோ காரணமாக சர்க்கரை உற்பத்தி குறையக்கூடும் என்பதால், அரசு உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய சர்க்கரை கையிருப்பை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடும். இதனால், சர்க்கரை அடிப்படையிலான எத்தனால் உற்பத்தி குறைய வாய்ப்பு உள்ளது.

