ஆண்டுதோறும் அமுல்படுத்தப்படும் பஸ் கட்டணத் திருத்தத்தை ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்தக் கோரி, தனியார் பஸ் சங்கங்கள் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இக்கோரிக்கை நேற்று (24) எழுத்துப்பூர்வமாக கையளித்ததாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
அதன்படி, அடுத்த 5 நாட்களுக்குள் கட்டணத் திருத்தம் தொடர்பாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்ப்பதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

