சச்சினின் சாதனையை முறியடிக்க வருகிறார் வைபவ்!

0
3

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரின் போது, இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு அணியின் ஏனைய வீரர்களிடமிருந்து தனித்த அறை (Dressing Room) ஒதுக்கப்படவுள்ளது.

16 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான ஐசிசி (ICC) மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் (ECB) பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, போட்டிகளின் போதும் அணி கலந்தாலோசனைகளின் போதும் சக வீரர்களுடன் இணைந்து செயல்பட அனுமதி உண்டு.

எனினும், உடை மாற்றும் போது மட்டும் அவர் தனியான அறையைப் பயன்படுத்த வேண்டும்.

இது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் இடர் மதிப்பீடுகள் குறித்து அந்தந்த உள்ளூர் கிரிக்கெட் அதிகாரிகளுடன் இந்திய அணியின் தொடர்பு அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சூர்யவன்ஷியின் வயது கருதி, அவர் தனது பெற்றோருடன் தங்குவதற்கும் பயணங்கள் மேற்கொள்வதற்கும் விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவரது பெற்றோர் தங்கும் செலவுகளை பிசிசிஐ (BCCI) ஏற்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

சூர்யவன்ஷி அயர்லாந்து அல்லது இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடரில் அறிமுகமானால், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியில் அறிமுகமாகும் மிக இளம் வயது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தியா, அயர்லாந்துடன் ஜூன் 26 மற்றும் 28 ஆகிய திகதிகளில் இரண்டு T20I போட்டிகளில் மோதுகிறது.

அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துடன் ஐந்து T20I மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here