உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகக் கட்டிடம் ஒன்றில் இன்று ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், பயிற்சி மையத்தைச் சேர்ந்த (Coaching Centre) 14 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கட்டிடத்தின் முதல் தளத்தில் தீப்பிடித்ததை அடுத்து, அங்கு படித்துக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
தீயின் வேகம் அதிகரித்ததால், தப்பிக்க வழி தெரியாமல் சில மாணவர்கள் முதல் மாடியில் இருந்து கீழே குதித்தனர்.

