உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தற்போதைய மட்டத்தில் நிலையாக நீடித்தால், இலங்கையில் எரிபொருள் விலை குறைப்பு குறித்து ஒகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குப் பின்னரே பரிசீலிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்தாலும், அதனை உடனடியாக நுகர்வோருக்கு வழங்க முடியாது.
இலங்கையின் எரிபொருள் கொள்வனவு நடைமுறையின்படி, மாதாந்த ஒப்பந்தங்கள் (Tenders) மூலம் முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்டு Stocks பெறப்படுவதால், உலக சந்தை சரிவின் பலன் இலங்கைக்குக் கிடைக்க இன்னும் சில மாதங்கள் ஆகும்.
உலக சந்தை மாற்றங்களுக்கு மத்தியிலும் உள்நாட்டு விலையை நிலையாக வைத்திருக்க அரசாங்கம் கடந்த மாதங்களில் பில்லியன் கணக்கான ரூபாயை எரிபொருள் மானியங்களுக்காகச் செலவிட்டுள்ளது.
தற்போது டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டிற்கும் கணிசமான மானியம் வழங்கப்படுகிறது.
எனவே, உலக சந்தையில் விலை குறைந்தால், அந்தப் பலன் முதலில் இந்த மானியச் செலவுகளை ஈடுசெய்யவே பயன்படுத்தப்படும்.
தற்போதைய சூழலில் எரிபொருள் ஒதுக்கீட்டுக்கான கியூ ஆர் (QR) முறைமை தொடர்ந்து அமலில் இருக்கும் என அமைச்சர் அனுர கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விற்பனை மூலம் அரசாங்கம் லாபம் ஈட்ட முனையவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர்கள், உலக சந்தை விலை தொடர்ந்து மாறாமல் இருக்கும் பட்சத்தில் ஒகஸ்ட் அல்லது செப்டம்பரில் அதன் பலனைப் பொதுமக்கள் பெறலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

