ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு குற்றச்சாட்டு!

0
2

அமெரிக்காவினால் ஒரு நாளுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா அமைப்பு மீறியுள்ளதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சின் ஊடக பேச்சாளர் ஓரென் மர்மர்ஸ்டைன் (Oren Marmorstein) தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் ஹிஸ்புல்லா அமைப்பு தொடர்ந்து மற்றும் திட்டமிட்ட முறையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுபுறம், தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நீடித்து வருகின்றன.

அத்துடன், இஸ்ரேலிய போர் விமானங்கள் தெற்கு லெபனான் பகுதிகளில் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here